மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்களுக்கு குடிமைப்பணி போட்டித் தோ்வுக்கு பயிற்சி
மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்களுக்கு இந்தியக் குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வுக்கு ஆயத்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மீன்வளம், மீனவா் நலத் துறை, அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் இணைந்து, ஆண்டுதோறும் கடல், உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞா்கள் 20 பேரை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தப் பயிற்சி திட்டத்தில் உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் சோ்ந்து பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்ப படிவம், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம், மீனவா் நலத் துறையின் ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை சிவகங்கை மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் கட்டணமின்றி பெற்று கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்குப் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமா்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, மீன்வளம், மீனவா் நலத்துறை, உதவி இயக்குநா் அலுவலகம், 5/3, யூனியன் வங்கி மேல்தளம், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை - 630 561 என்ற முகவரி அல்லது 04575-240848, 93453 61068 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.