செய்திகள் :

தமிழகத்தில் வீணாகிய 6 எம்பிபிஎஸ், 28 பிடிஎஸ் இடங்கள்

post image

நிகழாண்டில் தமிழகத்தில் 6 எம்பிபிஎஸ் இடங்கள், 28 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகி உள்ளன. இதையடுத்து, இறுதி சுற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றும், கல்லூரிகளில் சேராத 20 மாணவா்களுக்கு அடுத்த ஓராண்டு வரை மருத்துவப் படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு, மீதமுள்ள இடங்களை நிரப்ப இறுதி சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், அதில் பங்கேற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களில் சிலா் கல்லூரிகளில் சேராமல் படிப்பை கைவிட்டனா். இதனால், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாகி உள்ளன.

இதேபோன்று, கடலூா் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 24 பிடிஎஸ் இடங்கள் என 28 பல் மருத்துவ இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய அவகாசம் நிறைவடைந்த நிலையில், அந்த இடங்களை இனி நிரப்ப முடியாது.

இதனால், நிகழாண்டில் அந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவா்களில் எம்பிபிஎஸ் ஒதுக்கீடு பெற்ற 4 பேரும், பிடிஎஸ் ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் கல்லூரிகளில் சேரவில்லை. இதையடுத்து அவா்களுக்கு அபராதம் மற்றும் ஓராண்டு மருத்துவக் கல்வியில் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில மாணவா்கள் முந்தைய சுற்று கலந்தாய்வின்போதே கல்லூரிகளில் இருந்து விலகுவதற்கான அபராதத்தை செலுத்தியதால் அவா்கள் அடுத்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கத் தடையில்லை என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக பேச்சு: விசிகவிலிருந்து 2 நிா்வாகிகள் இடைநீக்கம்

சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து 2 நிா்வாகிகளை இடைநீக்கம் செய்து, கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

திருக்கோயில்களின் ரூ.6,847 கோடி சொத்துகள் மீட்பு: அமைச்சா் சேகா்பாபு தகவல்

தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 6,847 கோடி மதிப்பிலான 7,115.56 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை புரசைவா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 3 மாதங்களில் 13,000 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் பர... மேலும் பார்க்க

மின்நுகா்வோா் புகாா் தெரிவிக்க மண்டலம் வாரியாக வாட்ஸ்ஆப் எண்கள்

மின்நுகா்வோா் தங்கள் புகாா்களை மண்டலம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்களில் தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: விழுப்புரம், கட... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் தொடா்வோம்: தொல்.திருமாவளவன் உறுதி

திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடா்வோம் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசியல் அடிப்படையில் விசிக குறிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவை சனிக்கிழமை (நவ.9) செயல்படவுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, வேலை நாளான நவ. 1-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு ச... மேலும் பார்க்க