செய்திகள் :

டிசம்பர் 2... நாள் குறித்த தேர்தல் ஆணையம் - தப்புமா இரட்டை இலை?

post image

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதில், "கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில், அ.தி.மு.க-வில் நடந்திருக்கும் பல்வேறு மாற்றங்கள் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பல காலக்கட்டங்களில் புகாரளித்திருக்கிறேன். 'அ.தி.மு.க தொடர்பாக பல்வேறு சிவில் வழக்குகள் கீழமை நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால், அந்த வழக்குகளில் முடிவு தெரியும் வரையில், இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என கடந்த பிப்ரவரி மாதம் ஒரு புகாரும் அளித்தேன். அந்தப் புகார் மீது எந்த முடிவையும் இந்தியத் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. ஆகவே, இரட்டை இலை தொடர்பான புகார் மனு மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார் சூரியமூர்த்தி.

சென்னை உயர் நீதிமன்றம்

அந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, 'பிப்ரவரி மாதம் அளித்த புகார் மீது இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'ஒரு வாரத்தில் சூரியமூர்த்தியின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும்' என தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் நிரஞ்சன் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து, சூரியமூர்த்தியின் வழக்கு வரும் டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றையதினம், தாங்கள் எடுத்த நடவடிக்கையை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

'ஒருவாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும்' என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதால், இரட்டை இலை சின்னத்திற்கு புது நெருக்கடி உருவாகியுள்ளது. 'அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுவிட்டது. கட்சியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களையும் ஏற்று தங்களுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டது. ஆனாலும், சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் காட்டி, ஆணையம் நினைத்தால் சின்னத்தையே முடக்கலாம்" என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இன்பதுரை

சூரியமூர்த்தியின் வழக்கு குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் வழக்கறிஞரணி செயலாளர் இன்பதுரை, "சூரியமூர்த்திக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 2018-ம் ஆண்டு கட்சியின் உறுப்பினராக இருந்த அவர், தன்னுடைய உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்ளவில்லை. கட்சியிலேயே இல்லாதவர், அ.தி.மு.க-வின் சின்னத்தை முடக்கச் சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அன்பரசன் போட்டியிட்டபோது, அவருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு, அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. கழகத்திற்குள் செய்திருக்கும் மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்று இணையதளத்திலும் பதிவேற்றம் செய்தது.

சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் Symbol order para 15-ன் விதியின்படி, இரட்டை இலை சின்னம் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கே ஒதுக்கப்பட்டது. அந்தச் சூழலில், சூரியமூர்த்தி தன்னுடைய மனுவில், 'என்னுடைய புகார் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவில்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்குத்தான் தேர்தல் ஆணையம் எப்போதோ முடிவு சொல்லிவிட்டதே. இனி, அந்த முடிவை சூரியமூர்த்திக்கு தேர்தல் ஆணையம் தெரியப்படுத்தும். அந்தத் தகவலை உயர்நீதிமன்றத்திற்கு வரும் டிசம்பர் 2-ம் தேதி தெரியப்படுத்துவார்கள். இதனால், இரட்டை இலைக்கு எந்தச் சிக்கலும் வரப்போவதில்லை" என்றார் விளக்கமாக.

கே.சி.பழனிசாமி

முன்னாள் அ.தி.மு.க எம்.பி கே.சி.பழனிசாமி கூறுகையில், "அ.தி.மு.க தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்ய சூரியமூர்த்திக்கு எந்த வழக்குரிமையும் கிடையாது. அவர் மனுமீது, 'தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்' என நீதிமன்றம் சொல்லியிருப்பதால், பெரிதாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை. 'டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது' என்பதைத்தான் தேர்தல் ஆணையம் சொல்லப் போகிறார்கள். உண்மையிலேயே, இ.பி.எஸ்-க்கு நெருக்கடி தருவது மூன்று வழக்குகள்தான். ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடுத்திருக்கும் ஒரு வழக்கு, நான் தொடுத்திருக்கும் வழக்கு, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தாக்கல் செய்திருக்கும் வழக்கு ஆகிய மூன்று வழக்குகள்தான் இ.பி.எஸ்-க்கு நெருக்கடியைத் தருகின்றன" என்றார்.

சூரியமூர்த்தியின் வழக்கால் பெரிதாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை என நம்பிக்கை தெரிவிக்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள். அதேநேரத்தில், "சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் காட்டிதான், இரட்டை இலையை முடக்கச் சொல்கிறார் சூரியமூர்த்தி. ஏற்கெனவே, கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்யன், ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்குகளெல்லாம் நிலுவையில்தான் இருக்கின்றன. டெல்லி நினைத்தால், அந்த நிலுவை வழக்குகளைக் காரணமாகக் காட்டி, சூரியமூர்த்தியின் மனு மீது நடவடிக்கை எடுக்க முடியும். இரட்டை இலையை முடக்கவும் முடியும்" என்கிறார்கள் சில சீனியர் வழக்கறிஞர்கள்.

தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க-வின் பொதுக்குழு வரும் டிசம்பர் 15-ம் தேதி கூடவிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், சூரியமூர்த்தியின் வழக்கு கட்சி வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் பரபரப்பு எகிறுமா... அல்லது, புஸ்வானமாக போய்விடுமா என்பது தெரிந்துவிடும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Seeman: "அதானி மீது பாயாமல், ஐயா ராமதாஸ் மீது பாய்வதா?" - முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கண்டனம்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் ராமதாஸ் அதானி நிறுவன ஊழல் விவகாரம் குறித்து விமர்சித்தது பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு ... மேலும் பார்க்க

EPS-ஐ பதம் பார்க்கும் அரசியல் கத்திகள்...15 மாத பரீட்சை! | Elangovan Explains

இன்றைய இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா, அதிமுகவில் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலமாகவும் தன் அரசியல் எதிர்காலத்துக்காக சில நகர்வுகளை எடப்பாடி தீவிரப் படுத்துகிறார் ஆனாலும் கள ... மேலும் பார்க்க

Modi-க்கு எதிர்க்கட்சி; Edappadi Palanisamy-க்கு சொந்த கட்சி... சோதனை மேல் சோதனை | Imperfect Show

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

'அதானி விவகாரம்; திமுகவின் இரட்டை வேடம்' - ராமதாஸ் மீதான ஸ்டாலின் விமர்சனத்துக்கு அண்ணாமலை கண்டனம்

அதானி, நாட்டில் உள்ள மாநில மின் வாரியங்கள் மற்றும் தேசிய பொதுத்துறை சோலார் மின் நிறுவன அதிகாரிகளுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை எழுந்துள்ள நிலையில்,... மேலும் பார்க்க

ADMK: டிசம்பர் 15 அதிமுக பொதுக்குழுவா? வரிசைகட்டும் தீர்மானங்கள்; திமுக-வுக்கு எதிராக என்ன ப்ளான்?

அ.தி.மு.க பொதுக்குழுவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க, சமீபத்தில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க

DMK: கோஷ்டி பூசலால் ப்ளக்ஸ் பேனர் கிழிப்பு; என்ன நடக்கிறது நாகை திமுகவில்?

நாகப்பட்டினத்தில் நேற்று (நவம்பர் 25) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவே நாகப்பட்டினம் சென்று வேளாங்கண்ணியில் உள்ள சர்ச் வ... மேலும் பார்க்க