Aus v Ind : 'கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பௌலர்' - பும்ராவுக்கு மேக்ஸ்வெல் புகழாரம்
கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பௌலராக பும்ரா மாறுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பும்ராவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
'The Grade Cricketer Podcast' என்கிற தளத்துக்கு பேட்டியளித்திருக்கும் மேக்ஸ்வெல், 'கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பௌலராக பும்ரா மாறுவார் என நம்புகிறேன். இதை அவரின் ரெக்கார்டுகளையும் நம்பர்களையும் வைத்து சொல்லவில்லை. அவரை எதிர்கொண்டிருக்கும் பேட்டர்களின் மனநிலையை வைத்து சொல்கிறேன். அவரை எதிர்கொள்வது நிஜமாகவே கடினமான விஷயம். அவருக்கென பிரத்யேகமாக ஒருவித ஸ்டைல் இருக்கிறது. அவரால் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும். அவுட் சைடு மற்றும் இன்சைட் எட்ஜ் ஆக்கவும் முடியும். அவருடைய வேகத்தை மட்டுமே வைத்தும் தடுமாறச் செய்ய முடியும். ஸ்லோயர் ஒன்களையும் வீரியமாக வீசக்கூடியவர்.' என மேக்ஸ்வெல் ஏகத்துக்கும் பும்ராவை புகழ்ந்திருக்கிறார்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் கூட இந்திய அணி பும்ராவின் அசாத்தியமான ஆட்டத்தால்தான் வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்டநாயகன் விருதையுமே கூட பும்ராதான் வென்றிருந்தார். சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையையே கூட பும்ராவால்தான் இந்தியா வென்றிருந்தது. இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக பும்ரா இப்போது மாறியிருக்கிறார்.
கிரிக்கெட் உலகமே பும்ராவை புகழ்ந்து வருகையில் மேக்ஸ்வெல் புகழ்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை தானே.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...