பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங...
நவ.30ஆம் தேதி கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: ஆனால்.. பாலச்சந்திரன் தகவல்
சென்னை: காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நவ.30ஆம் தேதி புயல் சின்னம் கரையைக் கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பாலச்சந்திரன்.
அவர் கூறியதாவது, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியி்ல் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து 480 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 30ஆம் தேதி காரைக்காலுக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையே காலை 9 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளார்.