செய்திகள் :

நடுக்கடலில் சிக்கியுள்ள 6 மீனவர்களை மீட்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

post image

கடலூர் அருகே நடுக்கடலில் தனியார் துறைமுகத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூரில் தைகால் தோணித்துறையை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சித்திரைப்பேட்டை அருகே கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள் மற்றொரு படகு மூலம் மீட்கப்பட்டு அருகே உள்ள தனியார் கப்பல் இறங்கு தளத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

6 மீனவர்களும் சுமார் 2 நாள்களாக நடுக்கடலில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கடலில் சீற்றம் காணப்படுவதால் அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடலூர் பகுதியில் கடலில் விரிக்கப்பட்டிருந்த  வலைகளை எடுக்கச் சென்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்த கடலூர் தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் நீச்சலடித்து நடுக்கடலில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான சிறிய துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தனியார் துறைமுகத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் இரண்டாவது நாளாக தவித்து வரும் அவர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தங்களின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

வங்கக்கடலில் இன்று மாலையில் உருவாகவிருக்கும்புயல் அடுத்த இரு நாட்களுக்குள் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும்  என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

எனவே, இனியும் தாமதிக்காமல்  நடுக்கடலில் தனியார் துறைமுகத்தில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க  மத்திய, மாநில  அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நவ.30ஆம் தேதி கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: ஆனால்.. பாலச்சந்திரன் தகவல்

சென்னை: காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நவ.30ஆம் தேதி புயல் சின்னம் கரையைக் கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் புயலாக ம... மேலும் பார்க்க

அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கெல்லாம் கனமழை, மிக கனமழை!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,நேற்று (27-11-2024) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு ... மேலும் பார்க்க

சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பின் நிலைமை குறித்து நிவாரணம் அறிவிக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.தஞ்... மேலும் பார்க்க

சென்னையில் நாளை மிக கனமழை, நாளை மறுநாள் ரெட் அலர்ட்!

சென்னையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக இந்த... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) நேரில் சென்று நலம் விசாரித்தார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பலியான பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி!

சாலை விபத்தில் பலியான புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள... மேலும் பார்க்க