செய்திகள் :

Deivanai Elephant: பாகன் இறந்து, 11 நாள்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு வெளியே வந்த தெய்வானை..!

post image

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான  பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வருகை புரிவார்கள். இக்கோயிலில் 26 வயதான தெய்வானை என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் திருக்கோயில் வளாகத்தில் உலா வருவது வழக்கம்.

தெய்வானை மீது தெளிக்கப்பட்ட புனித நீர்

இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி, யானைக்கூடத்திற்குள் சென்ற உதவி பாகரின் உதயகுமாரின் உறவினர் சிசுபாலன் யானையுடன் தனது செல்போனில் செல்ஃபி எடுத்ததுடன், யானையின் துதிக்கையில் முத்தமிட்டார். இதில் ஆக்ரோஷமடைந்த யானை சிசுபாலனை துதிக்கையால் தாக்கி கீழே தள்ளி மிதித்துள்ளது. சிசுபாலனை காப்பாற்றச் சென்ற உதவி பாகர்  உதயகுமாரையும் எதிர்பாராத விதமாக தாக்கியுள்ளது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் 18-ம் தேதி முதல்  கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் வனத்துறை அலுவலகர்கள் குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு வாரமாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து மேலும் சில நாள்கள் யானையின் அசைவுகள், செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இதனையடுத்து யானையின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்பட உள்ளது.

தெய்வானை யானை

அதே நேரத்தில் சில நாள்கள் ஆசுவாசப்படுத்துவதற்காக திருச்சி அல்லது முதுமலை யானைகள் முகாமிற்கு அனுப்பலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக தினமும் காலை சரவணப் பொய்கையில் தெய்வானை யானைக்கென்றே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம்.

ஆனால், இச்சம்பவத்திற்குப் பிறகு யானைக்கூடத்திற்குள்ளேயே குளிப்பாட்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 11 நாள்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த தெய்வானை யானை, ஆசுவாசப்படுத்துவதற்காக யானைக்கூடத்தின் அருகில் கட்டிப் போடப்பட்டுள்ளது. யானையின் கோப சாந்திக்காக திருக்கோயில் ஆனந்த விலாச மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு யாகசலை பூஜைகளில் உள்ள கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீர் தெய்வானை மீது தெளிக்கப்பட்டது.

தெய்வானை யானை

அதன் பின்னரே கூடத்தை விட்டு வெளியே அழைத்து வரப்பட்டது.  11 நாள்களுக்குப் பிறகு வெளியே வந்த யானை வழக்கமான அசைவுகளுடன் உள்ளது. பக்தர்கள் யாரும் யானைக்கூடத்தின் அருகில் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் தூரத்தில் நின்று யானையை பக்தர்கள் பார்த்துச் செல்கின்றனர். யானைக்கூடத்தின் அருகில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

பழநி: `ரஷ்ய பக்தர் தந்த 6 அடி வேல்'- 12 கிலோ எடையில் தந்த காணிக்கையின் காரணம்

தமிழ்க் கடவுளான முருகன் கோயில்களில் முக்கியமான தளமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பேருந்துகளில... மேலும் பார்க்க

பூர்வ ஜென்ம பரிகார பூஜை: தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்

2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது. இதனால் உங்கள் பாவங்கள், தோஷங... மேலும் பார்க்க

சபரிமலை: `18 படிகளில் ஏறி நின்று போலீசார் போஸ்' வைரலாகும் போட்டோ... பக்தர்கள் கடும் எதிர்ப்பு!

மண்டலகால மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை நவம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பம்பா, சபரிமலை சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் போல... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பர... மேலும் பார்க்க

பைரவர் ஜென்மாஷ்டமி: அபிஷேக அலங்காரத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் - தாடிக்கொம்பு | Photo Album

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் - தாடிக்கொம்பு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் - தாடிக்கொம்பு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் - தாடிக்கொம்பு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் - தாடிக்கொம்பு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண ... மேலும் பார்க்க

`ஜனாதிபதிக்கு அடுத்து இங்குதான்' - பொன்விழா காணும் சபரிமலை தபால் நிலையம்... சுவாரஸ்யங்கள்..!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோருக்கு அங்கு செயல்படும் தபால் நிலையம் பற்றி தெரிந்திருக்கும். சபரிமலையில் 1963-ம் ஆண்டு தபால் நிலையத்துக்கான கட்டடம் கட்டப்பட்டது. மாளிகப்புறம் சன்னிதானத... மேலும் பார்க்க