Chennai Rains : சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - ஸ்பாட் விசிட் புகைப்படங்கள்...
மணிப்பூரைச் சொன்னால் கரீனா கபூரை சந்திக்கிறார் மோடி: காங்கிரஸ்
பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் கரீனா கபூர் குடும்பத்தினரைச் சந்தித்தை காங்கிரஸ் தலைவர் விமர்சித்துள்ளார்.
மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக நாளை (டிச. 13) முதல் 3 நாள்களுக்கு ராஜ் கபூர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பிரதமர் மோடியிடம் கபூர் குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அழைப்பின்போது, பிரதமர் மோடியின் நினைவாக, அவரது கையெழுத்தைக்கூட ராஜ் கபூரின் பேத்தி கரீனா கபூர் வாங்கினார். பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை, கரீனா கபூர் தனது சமூக ஊடகப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், இந்த நிகழ்வை காங்கிரஸின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க:ஒரே நாடு ஒரே தேர்தல்: அமைச்சரவை ஒப்புதல்!
பவன் கேரா கூறியதாவது, ``நாங்கள் மணிப்பூரைச் சொன்னோம்; ஆனால், அவர் கரீனா கபூரை நினைத்து விட்டார்’’ என்று பதிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இரு சமூகத்தினா் சார்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது. மணிப்பூருக்கு சென்று ஆய்வு செய்யுமாறு பிரதமர் மோடியை காங்கிரஸார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.