Happy Birthday V: BTS இசைக் குழுவின் வெற்றிக்குக் காரணமான 'V' - யார் இந்த Kim Taehyung?
கிம் டேஹ்யங் (Kim Taehyung), பொதுவாக "வீ" (V) எனவும் அறியப்படுகிறார்.
இவர் சர்வதேச அளவில் பிரபலமான பி.டி.எஸ் (BTS) குழுவின் உறுப்பினராக உள்ளார். இவரின் மேடை பெயரான வீ என்பதற்கு விக்டரி (வெற்றி) என்று பொருள். அதுமட்டுமல்ல பி.டி.எஸ் குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் வீ. அப்படியானவருக்குப் பிறந்தநாள் இன்று!
இவர் 1995 டிசம்பர் 30-ம் தேதி தென்கொரியாவிலுள்ள டேஹூவில் பிறந்தார். இவர் பி.டி.எஸ் ஆடிஷனில் விருப்பப்பட்டுக் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய நண்பர் ஒருவரை உற்சாகப்படுத்த ஆடிஷன் நடக்கும் இடத்திற்குச் சென்றிருக்கிறார். பிறகு, ஆடிஷனில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. அந்த விருப்பத்தைத் தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார். தந்தையும் கலந்து கொள்ள அனுமதி அளித்ததும் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் பி.டி.எஸ் குழுவின் உறுப்பினரானர். இப்போது கே-பாப் உலகின் தவிர்க்க முடியாத கலைஞர்களில் ஒருவராக வீ உருவெடுத்துள்ளார்.
பி.டி.எஸ் ஆர்மி-யில் அதிகம் பரவப்பட்ட வார்த்தைகளில் 'பொராஹே' என்ற வார்த்தைக்கு முக்கிய இடமுண்டு. இதற்கு 'I Purple You' என்று அர்த்தம். இந்த வார்த்தை ஒருவர் மற்றொருவர் மீது காட்டுகின்ற அன்பு, நம்பிக்கை, உண்மைத்தன்மையுடன் நடத்தல் மற்றும் ஆதரவளித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது வீ தான். தற்போது தென்கொரிய ராணுவத்தில் பணியாற்றி வரும் வீ, 2025 ஜூன் 10 அன்று ராணுவத்திலிருந்து விடைபெறவிருக்கிறார். வீ யின் பிறந்தநாளை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள பி.டி.எஸ் ரசிகர்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
HBD Kim Taehyung!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...