இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
76-வது இந்திய ராணுவ நாளையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராணுவ நாளான இன்று நமது நாட்டின் பாதுகாப்பின் காவலராக விளங்கும் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்
ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த தைரியர் மிக்கவர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம்.
இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்முறை, அர்ப்பணிப்பு ஆகிய்வற்றை வெளிப்படுத்துகிறது. நமது எல்லைகளைப் பாதுகாப்பதோடு, இயற்கை பேரிடர்களில் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதில் இந்திய ராணுவம் முத்திரைப் பதித்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.