செய்திகள் :

Bigg Boss 8: `நான் முதல் நாள்ல இருந்து சந்தேக கேஸ்ல வச்சிருக்கிற நபர் ஜாக்குலின்' - முத்துக்குமரன்

post image
`பிக் பாஸ் சீசன் 8' இறுதி நாட்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

டாப் 6 போட்டியாளர்களுடன் வீட்டிலிருந்து எவிக்ட்டான பலரும் இப்போது விருந்தினராக வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். அத்தனை நபர்களுடனும் பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையை கொண்டாடியிருந்தனர்.

கொண்டாட்டம் முடிவை எட்டியதும் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பணப்பெட்டி வந்தது. இம்முறை புதியதாக பெட்டியை வீட்டிற்கு வெளியே வைத்த பிக் பாஸ், அந்தப் பொட்டியை எடுத்துக் கொண்டு மீண்டும் இந்த வீட்டிற்குள் வருபவர் மீண்டும் இந்த போட்டியில் தொடரலாம் என அறிவித்தார். அதை மனதில் கொண்டு 50,000 தொகை மதிப்புடைய முதல் பணப்பெட்டியை அதிரடியாக ஓடிச்சென்று எடுத்துவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் திரும்பினார் முத்துக்குமரன். இன்றைய எபிசோடிலும் சில பணப்பெட்டிகள் வைக்கவிருப்பதால் அதை வேகமாகச் சென்று எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வருவதற்கு பலரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Soundariya

இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. டாப் 6 போட்டியாளர்கள் தங்களின் கடினமான மற்ற போட்டியாளர்கள் குறித்து பேசச் சொல்லியிருக்கிறார் பிக் பாஸ். இதில் முத்துகுமரன். ``ஜாக்குலின், இந்த வீட்டுக்கு வந்த முதல் நாள்ல இருந்து சந்தேக கேஸ்ல வச்சிருக்கிற ஆள்!'' என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

ரயான், `` எனக்கு பவித்ராவை பிடிக்காது. அதிகமாக முரண்பாடு வந்தது பவித்ராகூடதான்' எனக் கூறியிருக்கிறார். ``விஷால் ஒரு கேம்மை இப்படி பண்ணணும்னு யோசிச்சு பண்ணினதுனாலதான் உன்னுடைய கேம் லேட்டாக புரிஞ்சது'' என ஜாக்குலினும், ``முத்துக்குமரன்...தந்திரம், கூட்டணி இந்த விஷயமெல்லாம் எனக்கு பிடிக்காது. அதுல நான் முரண்படுறேன்.'' என சவுந்தர்யாவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த செயல் இன்றைய பிக் பாஸ் எபிசோடில் காரசாரமான விவாதத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Ajith Kumar: ``நன்றிகடன் பட்டுள்ளேன்'' - அஜித் வெளியிட்ட வீடியோ!

நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற மிச்சிலின் துபாய் 24H பந்தையத்தில் Ajith Kumar Racing என்ற தனது சொந்த அணியில் கலந்துகொண்டார். இந்த ஆண்டில் கார் பந்தைய சீசன் முமுழுவதும் அஜித் திரைப்படங்களில் நடிக... மேலும் பார்க்க

Tharunam: திரையிடல் நிறுத்தி வைப்பு! - மறுவெளியீடு செய்யப்போவதாக இயக்குநர் அறிவிப்பு

`முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தின் மூலம் நமக்கு பரிச்சயமானவர் நடிகர் கிஷன் தாஸ்.பொங்கல் வெளியீடாக நேற்றைய தினம் ரவி மோகனின் `காதலிக்க நேரமில்லை', மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷன் முரளியின்... மேலும் பார்க்க

Vaadivaasal: ``அகிலம் ஆராதிக்க `வாடிவாசல்' திறக்கிறது" - தயாரிப்பாளர் தாணு

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் `வாடிவாசல்'.சி.சு. செல்லப்பாவின் `வாடிவாசல்' நாவலை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. வெற்றி மாறன... மேலும் பார்க்க

Vijay Sethupathi: `பிக் பாஸ்' ராஜு அறிமுகமாகும் படத்தில் 2 பாடல்களை எழுதியிருக்கும் விஜய் சேதுபதி

பலரின் ஃபேவரிட் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான இவர், தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார் .அதே சமயம் கரியர் கிராஃப் உச்சத்தை நோக்கி நகரும்... மேலும் பார்க்க

Pongal 2025 : சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ், அஞ்சலி.. பிரபலங்களின் பொங்கல் க்ளிக்ஸ் | Photo Album

AtharvaArun Vijay FamilySivakarthikeyan FamilyMari Selvaraj ChildrenVani BhojanOviya in DharaviBharathAishwarya LekshmiPriyanka MohanAmrita AiyerSraddha SrinathAmala PaulShreya GhosalRitu VarmaSwasika... மேலும் பார்க்க

Nesippaya Review: விஷ்ணுவர்தன், ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நேசிக்க வைக்கிறார்களா, ஏமாற்றுகிறார்களா?

ஒரு அலுவலக கூட்டத்துக்காக நண்பர்களுடன் புறப்பட்டுச் செல்லும் அர்ஜுன் (ஆகாஷ் முரளி), தொலைக்காட்சி செய்தியில் அவனது முன்னாள் காதலி தியா (அதிதி ஷங்கர்) போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டதை அறிகிறார். ... மேலும் பார்க்க