Vaadivaasal: ``அகிலம் ஆராதிக்க `வாடிவாசல்' திறக்கிறது" - தயாரிப்பாளர் தாணு
வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் `வாடிவாசல்'.
சி.சு. செல்லப்பாவின் `வாடிவாசல்' நாவலை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. வெற்றி மாறன் `விடுதலை' திரைப்படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்ததால் இத்திரைப்படம் தாமதமானது. இத்திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தி ஒரு காணொளி ஒன்றையும் படக்குழு கடந்த 2022-ம் ஆண்டு வெளியிட்டிருந்தது.
இத்திரைப்படத்திற்காக சூர்யா இரண்டு காளைகளை தனது வீட்டில் வாங்கி வளர்த்து வருகிறாராம். அதுமட்டுமல்ல, இப்படத்திற்கான சில அனிமட்ரானிக்ஸ் வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் முன்பு வெளியாகின. மாட்டுப்பொங்கலான இன்று சூர்யா, வெற்றிமாறன் உடனான ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் தாணு.
இந்தப் பதிவில் அவர், ``அகிலம் ஆராதிக்க `வாடிவாசல்' திறக்கிறது'' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. `விடுதலை' திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன். இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயனாக நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...