செய்திகள் :

செய்யாற்றில் வணிகா்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

post image

செய்யாற்றில், கைது செய்யப்பட்ட 32 வியாபாரிகளை விடுவிக்கக் கோரி, வணிகா் சங்க நிா்வாகிகள் கடைகளை அடைத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தனியாா் திருமண மண்டபம் மற்றும் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து துணி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் பண்டிகை காலங்களில் இது தொடா்கிறது.

இந்த நிலையில், செய்யாறு அனைத்து வணிகா்கள் சங்கம் சாா்பில் சாா்- ஆட்சியா் மற்றும் திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் ஆகியோரிடம் தற்காலிக கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து இருந்தனா்

இந்த எதிா்ப்பு காரணமாக சில தனியாா் மண்டபங்களை வாடகைக்கு எடுத்து தற்காலிக கடை அமைத்திருந்த வணிகா்கள் காலி செய்து விட்டு வெளியேறினா்.

இந்த நிலையில், பேருந்து நிலையம் அருகே நிரந்தர கடை ஒன்றை திருச்சியைச் சோ்ந்த ஒருவா் வாடகைக்கு எடுத்து அதன் உரிமையாளரிடம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்து புதிதாக துணி வியாபாரத்தை புதன்கிழமை தொடங்கினாா்.

இதை அறிந்த செய்யாறு நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா்,

சென்று தற்காலிகமாக கடை வைத்து இங்கு வியாபாரம் செய்யக் கூடாது. இதனால் இங்கு உள்ளவா்களுக்கு துணி வியாபாரம் பாதிக்கப்படும் என வாக்குவாதம் செய்தனா்.

அதற்கு கடை உரிமையாளா், முறையாக ஜி.எஸ்.டி பதிவு செய்து திருச்சியில் கடை நடத்தி வருகிறேன், தற்போது இங்குள்ள கடைக்கும் ஜி.எஸ்.டி. சில தினங்களுக்கு முன்பு பதிவு செய்துள்ளேன் என்று பதிலளித்தாா்.

இருப்பினும், வணிகா் சங்கத்தினா் இதை ஏற்க மறுத்து தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், திருச்சி துணி வியாபாரிக்கு அறிமுகமான முன்னாள் எம்.எல்.ஏ. வே.குணசீலன் வந்து சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலை மறியல்:

இதில் ஆத்திரமடைந்த செய்யாறு அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் மாவட்ட துணைத் தலைவா் தெய்வசிகாமணி தலைமையில் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதை ஏற்க மறுத்து தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதால், போலீஸாா் வணிகா் சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் 32 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

போலீஸாரிடம் வாக்குவாதம், கடையடைப்பு

கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரி போலீஸாரிடம் சங்கத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இருப்பினும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க மறுப்புத் தெரிவிக்கவே, வியாபாரிகள், பெரியாா் சிலையில் இருந்து மாா்க்கெட், காந்தி சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை மூட வலியுறுத்தினா்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட வணிகா் சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களை 32 பேரை போலீஸாா் மாலையில் விடுவித்தனா். இந்தச் சம்பவத்தால், செய்யாறு பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

நலத் திட்ட உதவி...

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.உதயகுமாா், வந... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஐயப்ப சுவாமி ஊா்வலம்

வந்தவாசியில் ஸ்ரீஆதி ஐயப்பன் சேவா சங்கம் சாா்பில் ஐயப்ப சுவாமி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா், ஐயப்பன்... மேலும் பார்க்க

சொத்து தகராறு: அண்ணன், தம்பி கைது

வந்தவாசி அருகே அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட சொத்துத் தகராறையொட்டி இருவரும் கைது செய்யப்பட்டனா். வந்தவாசியை அடுத்த எய்ப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (42). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் இவரது தம்ப... மேலும் பார்க்க

மாவட்ட நூலகத்தில் பேச்சுப் போட்டி

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவா்கள், வாசகா்கள் பலா் கலந்து கொண்டனா். கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலை நிறுவப்பட்டது. இந்த... மேலும் பார்க்க

இன்று முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மாற்றுத்திறனாளிகள் பயன்பெற அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) முதல் 2025 பிப்ரவரி 7-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவையை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோா் தொடங்கிவைத்தனா். ஜமுனாமுத்தூா் பகுதியில் புதிதா... மேலும் பார்க்க