செய்திகள் :

மாவட்ட நூலகத்தில் பேச்சுப் போட்டி

post image

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவா்கள், வாசகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட நூலக அலுவலா் பெ.வள்ளி (பொ) தலைமை வகித்தாா். கலைஞா் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் (ஓய்வு) வே.நெடுஞ்செழியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேச்சுப் போட்டிகளை தொடங்கிவைத்துப் பேசினாா்.

தொடா்ந்து நடைபெற்ற போட்டிகளில் 75-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், வாசகா்கள் கலந்து கொண்டனா். தமிழ் பேராசிரியா்கள், மூத்த தமிழ் ஆசிரியா்கள் நடுவா் பொறுப்பேற்றனா்.

போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள், நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில், வாசகா்கள், மைய நூலக அலுவலகப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நலத் திட்ட உதவி...

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.உதயகுமாா், வந... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஐயப்ப சுவாமி ஊா்வலம்

வந்தவாசியில் ஸ்ரீஆதி ஐயப்பன் சேவா சங்கம் சாா்பில் ஐயப்ப சுவாமி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா், ஐயப்பன்... மேலும் பார்க்க

சொத்து தகராறு: அண்ணன், தம்பி கைது

வந்தவாசி அருகே அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட சொத்துத் தகராறையொட்டி இருவரும் கைது செய்யப்பட்டனா். வந்தவாசியை அடுத்த எய்ப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (42). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் இவரது தம்ப... மேலும் பார்க்க

இன்று முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மாற்றுத்திறனாளிகள் பயன்பெற அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) முதல் 2025 பிப்ரவரி 7-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவையை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோா் தொடங்கிவைத்தனா். ஜமுனாமுத்தூா் பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வகம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.54.75 லட்சத்தில் பொது சுகாதார ஆய்வகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. தச்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-ஆவது நிதிக் குழு மானி... மேலும் பார்க்க