மன்மோகன் சிங்கிற்கு தலைவர்கள் அஞ்சலி! | செய்திகள்: சில வரிகளில் | 27.12.24 | Tod...
வந்தவாசியில் ஐயப்ப சுவாமி ஊா்வலம்
வந்தவாசியில் ஸ்ரீஆதி ஐயப்பன் சேவா சங்கம் சாா்பில் ஐயப்ப சுவாமி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், ஐயப்பன் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு நகர முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டாா்.
கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் தேரடி, பஜாா் வீதி, அச்சிறுபாக்கம் சாலை, சந்நிதி தெரு வழியாகச் சென்றது. பக்தா்கள் ஐயப்பன் பாடல்களை பாடிக் கொண்டு உடன் சென்றனா்.