செய்திகள் :

Mamta Kulkarni: அப்ப பாலிவுட் ஸ்டார்; இப்ப சந்நியாசி.. கும்பமேளாவில் நடிகை மம்தா எடுத்த புது அவதாரம்

post image

பாலிவுட்டில் 1990களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் மம்தா குல்கர்னி. திடீரென நடிப்பிலிருந்து காணாமல் போன மம்தா குர்கர்னி தென்னாப்பிரிக்காவில் விக்கி கோஷ்வாமி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியானது.

விக்கி கோஷ்வாமி போதைப்பொருள் கடத்தும் தொழில் செய்து வருவதாகவும் சொல்லப்பட்டது. மகாராஷ்டிராவில் 2016 ஆம் ஆண்டு 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மம்தா குல்கர்னியின் பெயரும் சேர்க்கப்பட்டது. இப்போதைப்பொருள் தொடர்பாகக் கென்யாவில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் விக்கி கோஷ்வாமியுடன் மம்தா குல்கர்னியும் கலந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று கோரி மம்தா குல்கர்னி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் மம்தா குல்கர்னியை இவ்வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

மம்தா குல்கர்னி
மம்தா குல்கர்னி

இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக மம்தா குல்கர்னி 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் இந்தியா திரும்பினார். அவர் மும்பை திரும்பியதை உணர்ச்சிப்பூர்வமாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். 2000 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டு, 2024 ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தியா திரும்பிய மம்தா குல்கர்னி இப்போது கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ளார். கும்பமேளாவில் கலந்து கொண்டதோடு தன்னைச் சந்நியாசியாக மாற்றிக்கொண்டுள்ளார். மம்தா குல்கர்னி பிரயக்ராஜில் ஆசாரியா மகாமண்டலேஷ்வர் மற்றும் டாக்டர். லட்சுமி நாராயண் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதோடு, அவர்களுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் தனது பங்கு குறித்து அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

அங்குள்ள கின்னார் ஜுனா அகாரா மடத்தில் மம்தா குல்கர்னியைச் சந்நியாசியாக மாற்றும் சடங்கு நடந்தது. இதில் பிண்ட தானமும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மம்தா குல்கர்னி மகாமண்டலேஷ்வராக மாறி இருக்கிறார். இப்போது மம்தா குல்கர்னி காவி உடையணிந்து ருத்ராட்ச மாலை அணிந்து இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. மம்தா குல்கர்னி தனது பெயரை ஸ்ரீ யமை மம்தா நந்த் கிரி என்று மாற்றிக்கொண்டுள்ளார். அடுத்து வாரனாசி மற்றும் அயோத்திக்குப் புனித பயணம் மேற்கொள்ள இருப்பதாக மம்தா குல்கர்னி தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Kumba Mela: `மாடலிங், நடிப்பில் நிம்மதியில்லை’ - கும்பமேளாவில் கவனம் பெறும் இளம் பெண் துறவி

உத்தபிரதேச கும்பமேளா..!உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெ... மேலும் பார்க்க

Kumbh Mela: 7 அடி நவீன பரசுராமர், தலையில் புறாவுடன் வரும் சாது; கவனத்தை ஈர்த்த கும்பமேளா காட்சிகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய கும்பமேளாவில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க

Maha Kumbh Mela 2025: நாக சந்நியாசியாக மாறும் 12000 துறவிகள்... கவனத்தை ஈர்த்த ஐ.ஐ.டி பாபா..!

Maha Kumbh Mela 2025:உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளாவில் இது வரை 5 கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். தொடர்ந்து புனித நீராட... மேலும் பார்க்க

கும்பமேளா: பக்தர்களை கவர்ந்த சாதுக்கள்; 32 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்தும் புனிதநீராட மறுத்த பாபா!

உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளா, அலகாபாத் எனப்படும் பிரயக்ராஜ் நகரில் நேற்று விமரிசையாக தொடங்கியது. இக்கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் ம... மேலும் பார்க்க

Kumbh Mela களைகட்டும் கும்பமேளா; `கமலா' எனப் பெயர் மாற்றிக்கொண்டு புனித நீராடும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி

உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாகும்பமேளா இன்று பிரயக்ராஜ் நகரில் தொடங்கியது. இன்று காலை தொடங்கிய கும்பமேளாவில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ... மேலும் பார்க்க

நீலகிரி ஐயப்பன் கோவிலில் பாரம்பர்ய விளக்குத் திருவிழா... தரிசனம் காண குவிந்த பக்தர்கள்!

நீலகிரியின் சபரிமலை என பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் இயற்கை எழில் கொஞ்சும் மஞ்சூர் பகுதியில் அமைந்திருக்கிறது. பாரம்பர்ய வழிபாடு கொண்ட இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி... மேலும் பார்க்க