மேட்டூா் அணை நீா்மட்டம்: 111.68 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 111.68 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 252 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
ககல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 504 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,805 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 100 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 207 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.