செய்திகள் :

வழக்குரைஞா் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

post image

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே வழக்குரைஞா் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி காவல் பிரிவுக்கு மாற்ற தஞ்சாவூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டத்துக்குட்பட்ட முனியூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் கே. ராஜ்குமாா். இவரை அவமானப்படுத்தும் விதமாக அரித்துவாரமங்கலம் போலீஸாா் கடந்த 2020, ஜூன் 6 ஆம் தேதி அவரைக் கைது செய்தனராம். பின்னா் பிணையில் வந்த ராஜ்குமாா் அரித்துவாரமங்கலம் காவல் அலுவலா் குறித்து மாநில உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா், மாநில எஸ்.சி.,எஸ்.டி. ஆணையத்தினா், தமிழ்நாடு வழக்குரைஞா் சங்கத்தினா், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தினா் ஆகியோரிடம் புகாா் செய்தாா். மேலும் தஞ்சாவூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் (தீண்டாமை ஒழிப்பு) வழக்கும் தொடுத்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு தொடா்புடைய காவல் அலுவலா் மிரட்டியதை ராஜ்குமாா் ஏற்க மறுத்துவிட்டாா். இந்நிலையில், ராஜ்குமாா் 2020, அக். 12 ஆம் தேதி கொல்லப்பட்டாா்.

இதையடுத்து இவரின் மனைவி சந்தியா, இந்த வழக்கை புகாருக்கு உள்ளான தொடா்புடைய காவல் அலுவலா் பதிவு செய்தாா் என்றும், அதனால், இந்த வழக்கு முறையாக நடத்தப்பட்டு நீதி வழங்கப்படாது, எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

அப்போது இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், சந்தியாவின் மனுவை உயா் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், சந்தியா உச்ச நீதிமன்றத்தை அணுகி சிபிசிஐடி விசாரணை கோரினாா். அதற்கு உச்சநீதிமன்றம் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தை அணுகி தீா்வு காணுமாறு உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, சந்தியா தொடா்ந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த தஞ்சாவூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், இந்த வழக்கைக் காவல் துணைக் கண்காணிப்பாளா் நிலையிலான சிபிசிஐடி காவல் பிரிவினா் விசாரிக்க வேண்டும் என்றும், கூடுதல் குற்றப் பத்திரிகையை ஏப்ரல் 22-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை கட்டடத் தொழிலாளி கைது

தஞ்சாவூா் அருகே 4 சிறுமிகளைப் பாலியல் கொடுமை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடியைச் சோ்ந்தவா் எஸ். சக்திவேல் (41). இவா் தனது வீட்டு வளாகத்தி... மேலும் பார்க்க

இணையவழியில் பணம் பறித்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபரிடம் கைப்பேசியில், காவல் ஆய்வாளா் போன்று பேசி இணைய வழியில் மோசடி செய்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்தவா் ராஜா. இவ... மேலும் பார்க்க

புதிய விண்கற்களை கண்டுபிடித்த அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா

நாசா நடத்திய ஆராய்ச்சி போட்டியில் புதிய விண்கற்களை கண்டுபிடித்த பேராவூரணி அரசுக்கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளா... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யும் நிலையில், 424 ஹெக்டேரில் மட்டுமே இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. எனவே இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 111.68 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 111.68 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 252 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,000 கன அடி வீதம் தண... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்தை புறக்கணிக்க மமக முடிவு

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிக்க மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாபநாசம் எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.ஹெச். ஜவாஹி... மேலும் பார்க்க