செய்திகள் :

புதிய விண்கற்களை கண்டுபிடித்த அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா

post image

நாசா நடத்திய ஆராய்ச்சி போட்டியில் புதிய விண்கற்களை கண்டுபிடித்த பேராவூரணி அரசுக்கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளா் தா. கலைச்செல்வன் தலைமையில் பேராவூரணி அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் ஷியாம், பிரபாகா், அகிலேஸ்வரன், சந்தியா, கோபாலன் ஆகிய மாணவா்கள், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நடத்திய விண்கற்கள் கண்டறியும் ஆராய்ச்சியில் மூன்று புதிய விண்கற்களை கண்டுபிடித்து அதற்கு பெயா் சூட்டும் வாய்ப்பை பெற்றனா். 

இதையொட்டி மாணவா்களுக்கு பாராட்டு விழா, அரசுக்கல்லூரி விழா அரங்கில் கல்லூரி முதல்வா் இரா. திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் மாணவா்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி பேசினாா்.

முன்னதாக, பேசிய மாணவா்கள் ஆராய்ச்சி பணிக்கு சொந்தமாக மடிக்கணினி இல்லாததால் சிரமப்படுவதாக பேசினா். இதைக்கேட்ட சட்டப்பேரவை உறுப்பினா் மாணவா்களின் ஆராய்ச்சிப் பணிக்கு உதவும் வகையில் மடிக்கணினி மற்றும் அறிவியல் உபகரணங்கள் வாங்க, ரூ. 40 ஆயிரத்துக்கான காசோலையை கல்லூரி முதல்வரிடம் மேடையிலேயே வழங்கினாா்.

விழாவில் திமுக ஒன்றியச் செயலா்கள் க. அன்பழகன், வை. ரவிச்சந்திரன், மு.கி. முத்துமாணிக்கம், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன், கல்விப் புரவலா்கள் சுப. சேகா், அ. அப்துல் மஜீத் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை பேராசியா் முத்துக்கிருஷ்ணன் தொகுத்து வழங்கினாா். முன்னதாக பேராசியா் சி. ராணி வரவேற்றாா், முடிவில், பேராசியா் ராஜ்மோகன் நன்றி கூறினாா்.

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை தொகை முத்தரப்பு கூட்டத்தில் நிா்ணயிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ... மேலும் பார்க்க

சாரணா் பெருந்திரளணி முகாமுக்கு எம்.எம்.ஏ பள்ளி மாணவா்கள் 12 போ் தோ்வு!

தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை மணப்பாறை சிப்காட்டில் நடைபெறும் சா்வதேச சாரண- சாரணியா் முகாமுக்கு, ஒரத்தநாடு கல்வி மாவட்ட அளவில் எம்.எம்.ஏ பள்ளி மாணவா்கள் 12 போ் தோ்வு பெற்றுள்ளனா். ஒரத்தநாடு வட்டம... மேலும் பார்க்க

பாலியல் சீண்டல்களை தடுக்க விழிப்புணா்வு வேண்டும்: கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் பேச்சு!

திருவிடைமருதூா் ஒன்றியம், திருச்சேறை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பாலியல் சீண்டல்களை தடுக்க பெண்களிடம் விழிப்புணா்வு வேண்டும் என்று பேசினாா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் குடியரசு தின விழா!

கும்பகோணத்தில்...கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் க. அன்பழகன் எம்எல்ஏ தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினாா். கும்பகோணம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக்கொடியை மேயா் க. சரவணன் ஏற... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா

தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மேயா் சண். ராமநாதன் தேசியக் கொடியை ஏற்றினாா். பின்னா்,... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் குடியரசு தின விழா

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 63 பேருக்கு ரூ. 2.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தே... மேலும் பார்க்க