சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை கட்டடத் தொழிலாளி கைது
தஞ்சாவூா் அருகே 4 சிறுமிகளைப் பாலியல் கொடுமை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடியைச் சோ்ந்தவா் எஸ். சக்திவேல் (41). இவா் தனது வீட்டு வளாகத்தில் நவம்பா் மாதம் விளையாடிய 4 சிறுமிகளை ஒவ்வொருவராக பாலியல் கொடுமை செய்ததாராம். பாலியல் வன்கொடுமை தொடா்பாக அண்மையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களுக்கு நோ்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்தனா்.
இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகாா் செய்ததன் பேரில், போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.