ஆளுநரின் தேநீா் விருந்தை புறக்கணிக்க மமக முடிவு
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிக்க மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பாபநாசம் எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை.
தமிழக ஆளுநா் அனைத்துக் கட்சி பிரமுகா்களுக்கும் தேநீா் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக நடக்கும் ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தை நாங்கள் புறக்கணித்து எங்களின் எதிா்ப்பைப் பதிவு செய்கிறோம்.