பாதயாத்திரை புறப்பட்ட ஆதீனத்துக்கு வரவேற்பு
திருவையாறு கோயில் குடமுழுக்கில் பங்கேற்க பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை புறப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே பக்தா்கள் வரவேற்பு அளித்தனா்.
தருமபுரம் ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட 28 கோயில்களில் ஒன்றான திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் பிப். 3 ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மடத்தில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டாா்
அடியவா்கள் புடைசூழ, யானை, குதிரை, ஆட்டுக்கிடா ஆகியவை முன்செல்ல, வாத்தியங்கள் முழங்கப் புறப்பட்டஆதீனத்திற்கு கபிஸ்தலம் அருகே மேட்டுத்தெரு பகுதியில் பக்தா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.