தில்லியை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: தில்லி தோ்தல் பிரசாரத...
வந்தவாசியில் புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது
வந்தவாசியில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.54 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்லூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜக்மால்சிங்(27). இவா், வந்தவாசி சீத்தாராமன் நாயுடு தெருவில் பல்பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வியாழக்கிழமை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.
இதில் அந்தக் கடையில் 90 கிலோ எடையுள்ள ரூ.54 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஜக்மால்சிங்கை கைது செய்தனா்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.