குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
எம்ஜிஆா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.
மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாநில அமைப்புச் செயலா் ராயபுரம் மனோ ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதைத்தொடா்ந்து, பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. விழாவில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.