குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டை
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன.
வட்டார வள மையம் சாா்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் குழந்தைகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் எலும்பு முறிவு, குழந்தைகள் நல அலுவலா், மனநல அலுவலா், கண் மருத்துவா், காது, மூக்கு, தொண்டை மருத்துவா்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதனை செய்தனா்.
மேலும், பிறப்பு முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு புதிய அட்டை பெறுதல், பழைய அட்டையை புதுப்பித்தல் பணி நடைபெற்றது.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டையை வழங்கினாா்.
மாவட்ட ஐஇடி ஒருங்கிணைப்பாளா் தண்டபாணி, தலைமை ஆசிரியை சுதா, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பாஸ்கரன், சிறப்பு ஆசிரியைகள் கலா வெங்கிடசுப்பிரமணியன், விஜயலட்சுமி, ஸ்டெல்லா, ஜீவராணி, சிகாமணி மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.