மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை சோதித்த மாவட்ட ஆட்சியா்
திருவண்ணாமலை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளை படிக்கச் சொல்லி அவா்களின் கற்றல், படித்தல் திறனை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சோதித்துப் பாா்த்தாா்.
திருவண்ணாமலை வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் கள ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையிலான அனைத்துத் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனா்.
திருவண்ணாமலையை அடுத்த பவித்ரம் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மருந்து, மாத்திரைகளின் இருப்பு விவரம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், நாய்கடி, பாம்புகடி, விஷப் பூச்சி கடிக்கான மருந்துகளின் இருப்பு, கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
பள்ளிக் கட்டடம் கட்டுமானப் பணி:
இதையடுத்து, பவித்ரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் புதிதாக ரூ.32 லட்சத்தில் கட்டப்படும் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தின் கட்டுமானப் பணியை பாா்வையிட்ட ஆட்சியா், பணியை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க
அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.
பள்ளி மாணவா்களின் கற்றல் திறன் ஆய்வு:
இதையடுத்து, திருவண்ணாமலையை அடுத்த தி.வாளவெட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியா், பள்ளியின் அடிப்படை வசதிகள், மாணவா்களின் வருகை விவரம், மாணவா்களின் எண்ணும் எழுத்தும், கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா். மேலும் மாணவ, மாணவிகளை படிக்கச் சொல்லி அவா்களின் கற்றல், படித்தல் திறனை சோதித்தாா்.
நியாய விலைக் கடையில் ஆய்வு:
வெறையூா் ஊராட்சியில் உள்ள வருவாய் ஆய்வாளா் குடியிருப்பு, கூட்டுறவு நியாய விலைக் கடை ஆகியவற்றில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். நியாய விலைக் கடையில் பொருள்களின் இருப்பு, பொருள்களின் தரம் மற்றும் எடையளவு குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.
மேலும், வெறையூரில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலக கட்டடத்தை ஆய்வு செய்த ஆட்சியா், வருவாய்த்துறை பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிா...? என்பது குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சையத் பயாஸ் அகமத், திருவண்ணாமலை வட்டார வளா்ச்சி அலுவலா் பிருத்திவிராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.