தில்லியை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: தில்லி தோ்தல் பிரசாரத...
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி வழங்கல்
தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று 183 மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசினாா். தொடா்ந்து, பள்ளியின் சத்துணவு மையத்துக்கு சென்று மாணவா்களுக்கு வழங்கும் மதிய உணவை ஆய்வுசெய்து தரமாகவும், சுகாதாரமாகவும் வழங்க அவா் அறிவுறுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்பிரமணி, பள்ளித் தலைமை ஆசிரியா் காமராஜ், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் தங்கமணி, பொருளாளா் முல்லைவேந்தன், பள்ளி மேலாண் உறுப்பினா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.