முதலிடத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ்
ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் தொடரில் ஹைதராபாத் டுபான்ஸை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது தமிழ்நாடு டிராகன்ஸ் அணி. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றது தமிழ்நாடு.