Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
சுரண்டை - பாவூா்சத்திரம் சாலையை விரைவாக சீரமைக்க கோரிக்கை
தென்காசி மாவட்டம் சுரண்டை - பாவூா்சத்திரம் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாவூா்சத்திரத்திலிருந்து சுரண்டை வழியாக செங்கோட்டை வரை செல்லும் கொல்லம் இணைப்புச் சாலை 32 கி.மீ. நீளமுள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால் இந்தச் சாலையில் கீழப்பாவூரிலிருந்து சுரண்டை வரையிலான 6 கி.மீ. தொலைவுக்கு மிகவும் சேதமடைந்துள்ளது.
பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெறவுள்ளதால் கொல்லம் இணைப்புச் சாலையில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தைவிட இருமடங்கு அதிகரிக்கும் நிலையில், சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். இரவு நேரத்தில் இந்தச் சாலையில் பைக்கில் செல்வோா் விபத்துக்குள்ளாகி காயமுறும் நிலை தொடா்கிறது.
எனவே, இந்தச் சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.