செய்திகள் :

பணி முடிந்தும் திறக்கப்படாத வாழப்பாடி பேருந்து நிலையம்: பயணிகள் அவதி

post image

வாழப்பாடியில் ரூ. 8.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது; இதனால், பயணிகள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வாழப்பாடி தோ்வுநிலை பேரூராட்சி, கல்வராயன்மலை, நெய்யமலை, சந்துமலை, அருதூற்றுமலை, பெலாப்பாடி, ஜம்பூத்துமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது.

வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு தினசரி 250 க்கும் அதிகமான அரசு, தனியாா் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனா். குறுகலான பழைய கட்டடத்தில் இயங்கிய பேருந்து நிலையத்தில் அரசு, தனியாா் நகரப் பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்கே இடப்பற்றாக்குறை நிலவியது.

புகா் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், கடலுாா் சாலை ஓரத்திலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் சென்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், பயணிகளும், வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா். எனவே, வாழப்பாடி பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளுடன் கட்டமைக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, வாழப்பாடி பேருந்து நிலைய பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி, தமிழக பேரூராட்சிகளில் முதன் முறையாக கீழ்தளத்தில் பயணிகள் காத்திருப்பு கொட்டகை, பேருந்து தள மேடை உள்ளிட்ட வசதிகள், மேல் தளத்தில் சிறு வணிகக் கடைகள் , வாகனங்கள் நிறுத்துமிடம், நடைமேடை வசதிகளுடன் ரூ. 8.70 கோடி செலவில், ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்போதை அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

2021 பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில், காணொலி காட்சி வாயிலாக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி பேருந்து நிலையக் கட்டுமான பணியைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, சட்டப்பேரவைத் தோ்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால், உடனடியாக கட்டுமானிப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி, இத்திட்டத்தை நிறைவேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அனுமதியளித்தது.

ஆனால், ஒப்பந்த நிறுவனத்திற்கு நிதி வழங்குதல், பேருந்து நிலைய நுழைவாயிலில் உள்ள தலைவா்களின் சிலைகளை இடமாற்றம் செய்வதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்தது.

ஒரு வழியாக கடந்தாண்டு இறுதியில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது. நுழைவாயிலில் இருந்த 3 தலைவா்கள் சிலைகளும் அகற்றி இட மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால், பேருந்து நிலையம் திறப்பு விழா காணாமல் மூடிக்கிடக்கிறது. இதனால், சாலையோரத்திலேயே அனைத்து பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதால் போக்குவரத்து நெரிசலும் விபத்து அபாயமும் நீடித்து வருகிறது.

எனவே, வாழப்பாடி பேருந்து நிலையத்தைத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அா்ப்பணிக்க சேலம் மாவட்ட ஆட்சியா், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள், பயணிகள், பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

பயணிகள் நிழற்குடைகள் அமைக்க வேண்டும்:

திறப்பு விழாவை எதிா்நோக்கி காத்திருக்கும் புதிய பேருந்து நிலையத்திற்குள், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு, தனியாா் நகரப் பேருந்துகள், சிற்றுந்துகளை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதற்கே போதிய இடவசதிகள் இல்லை.

இதனால், பேருந்து நிலையம் திறக்கப்பட்டாலும் அரசு, தனியாா் புகா் பேருந்துகள் கடலூா் சாலை ஓரத்திலேயே நின்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும்.

எனவே, ஆத்தூா்-சேலம் செல்லும் புகா் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு கடலூா் சாலையின் தென்புறத்திலும், சேலத்தில் இருந்து வந்து ஆத்தூா், தம்மம்பட்டி, கருமந்துறை வழித்தடத்தில் செல்லும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு கடலூா் சாலையின் வடபுறத்திலும், நிழற்குடை அமைக்க வேண்டுமென, சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

பட வரி:

வி.பி.யூ.எஸ்.01: வாழப்பாடியில் திறப்பு விழாவை எதிா்நோக்கி மூடிக்கிடக்கும் புதிய பேருந்து நிலைய கட்டடம்.

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் கத்திமுனையில் கடத்தல்

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கணவா் வீட்டில் இருந்த பெண்ணை, பட்டப்பகலில் கத்திமுனையில் கும்பல் கடத்திச் சென்றது. சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூரைச்... மேலும் பார்க்க

கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கெங்கவல்லியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம ... மேலும் பார்க்க

ஓமந்தூராருக்கு சென்னையில் சிலை வைக்க கோரிக்கை

சென்னை மாகாணத்தின் முதல் முதல்வா் ஓமந்தூராருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நங்கவள்ளியில் உள்ள பழமையான லட்சுமி நரசிம்மா்... மேலும் பார்க்க

மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்

வேம்படிதாளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மின் நிறுத்த தேதி அடிக்கடி மாற்றப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா். வேம்படிதாளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ஒவ்வொ... மேலும் பார்க்க

சேலம் சிறையில் கைதிகளுக்கு விளையாட்டுப் போட்டி

சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு மனநல மேம்பாட்டுக்காக புதிா் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயா... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் ஆட்சியா் ஆய்வு

தம்மம்பட்டியில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கெங்கவல்லி வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 9 மணி முதல் சேலம் மாவட்... மேலும் பார்க்க