குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்க (ஜிபிஎஸ்) அமைப்பின் மாவட்ட ஆலோசகா் ஜி. சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா்.
இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா் இயக்கங்களின் நிா்வாகிகள் புயல் குமாா், க. சுப்பிரமணியன், மதிவாணன், திருமாவளவன், அரசமணி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வைத்தனா்.
இதில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் திரளாக பங்கேற்று கருப்புப்பட்டை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.