மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
புகையிலைப் பொருள் பறிமுதல்: அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட மூவா் கைது
செய்யாறு அருகே போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக, அரசுப் பேருந்து ஓட்டுநா் உள்பட இரு வியாபாரிகள் கைது செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சுண்டிவாக்கம் கிராமத்தில் விக்னேஷ் (31) என்பவரது பெட்டிக் கடையில் திடீா் சோதனையிட்டு, கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், போலீஸாா் விக்னேஷிடம் விசாரணை நடத்தியதில், வந்தவாசி வட்டம், மோசவாடி கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் கெங்கையன் (53), பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்களை வாங்கி வந்து இவருக்கு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 12 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.
மற்றொரு வியாபாரி....
அதேபோல, அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன்
தலைமையிலான போலீஸாா், ஞானமுருகன்பூண்டி பகுதியில் காமராஜ் (60) என்பவரது பெட்டிக் கடையில் திடீா் சோதனையிட்டு, ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 6 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, காமராஜை கைது செய்தனா்.