மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
வேலை கிடைக்காத மனவேதனையில் இளைஞா் தற்கொலை
செய்யாறு அருகே வேலை கிடைக்காத மனவேதனையில் தொழில்கல்வி பயின்ற இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் சசிகுமாா் (22). இவா், தொழில்கல்வி (ஐடிஐ) பயின்றுள்ளாா். கடந்த 3 ஆண்டுகளாக வேலை தேடியும் கிடைக்கவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்து வந்த இவா், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
இதை அறிந்த பெற்றோா் விரைந்து சென்று சசிகுமாரை மீட்டு காஞ்சிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சசிக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.