விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்; வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
Padma Awards: தமிழ் பறையிசைக் கலைஞர், அஷ்வின், AK உட்பட 139 பேருக்கு விருது - மத்திய அரசு அறிவிப்பு
கல்வி, இலக்கியம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், சாதனையாளர்கள், சேவை செய்பவர்ககளுக்கு ஆண்டுதோறும் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும் மத்திய அரசு, இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் பெறும் நபர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், நடிகர் அஜித் உட்பட என 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலு ஆசான் - மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பறையிசைக் கலைஞர்.
தட்சணாமூர்த்தி - 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவில் இசையுலகில் செயல்பட்டு வரும் புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர்.
பீம் சிங் பவேஷ் - நயீ ஆஷா என்ற அறக்கட்டளையின் மூலம் 22 ஆண்டுகளாக, முசாஹர் என்ற பட்டியலினச் சமூக மக்களுக்கு உதவி வரும் சமூக சேவகர்.
ஹர்விந்தர் சிங் - 2024 பாரா ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்றவர்.
நீர்ஜா பட்லா - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் தடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற டெல்லியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்.
ரவிச்சந்திரன் அஷ்வின் - டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்.
எல்.ஹாங்திங் - பூர்வீகமல்லாத பழங்களைப் பயிரிடுவதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த நாகலாந்து பழ வியாபாரி.
ஹக் மற்றும் கொலீன் காண்ட்சர் - கணவன் மனைவியான இருவரும் Indian travel journalism-ல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கின்றனர்.
ஜோனாஸ் மாசெட்டி - பிரேசிலைச் சேர்ந்த பொறியாளரான இவர் இந்து ஆன்மீகத் தலைவராக மாறி, இந்திய ஆன்மீகம், தத்துவம், கலாசாரத்தைப் பரப்ப பங்காற்றியிருக்கிறார்.
ஹரிமான் ஷர்மா - பிலாஸ்பூரைச் சேர்ந்த ஆப்பிள் விவசாயியான, 'HRMN 99' என்ற ஆப்பிள் வகையை உருவாக்கினார். இந்த வகை ஆப்பிள், கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்தில் குறைந்த உயரத்தில் வளரக்கூடியதாகும்.
ஷைகா ஏஜே அல் சபா - குவைத்தில் முதல் உரிமம் பெற்ற யோகா மையத்தை நிறுவியர்.
நரேன் குருங் - காங்டாக்கைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞரான இவர், 60 ஆண்டிகளாகச் சிக்கிம் மற்றும் நேபாள நாட்டுப்புற இசை, நடன மரபுகளைப் பாதுகாக்க தன்னை அர்பணித்திருக்கிறார்.
இவர்கள் உட்பட மொத்தம் 113 பேருக்குப் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், தமிழ் நடிகர் அஜித்குமார் உட்பட 7 பேருக்குப் பத்ம விபூஷண் விருதுகளும், 19 பேருக்குப் பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.