வாக்காளா் தின விழிப்புணா்வு
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு இந்திய தோ்தல் ஆணையத்தின் இலச்சினை வடிவில் மாணவகள் திறந்தவெளி மைதானத்தில் நின்று வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஜன. 25-ஆம் தேதி, 15-ஆவது தேசிய வாக்காளா் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி பிஷப் ஹீப் கல்லூரியில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் 15-ஆவது தேசிய வாக்காளா் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய தோ்தல் ஆணையத்தின் இலச்சினையைப் போன்று 1,200 மாணவா்கள் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதன் தொடா்ச்சியாக, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் என அனைவரும் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்றனா்.
இந்த நிகழ்வில், கோட்டாட்சியா் கே. அருள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வில்சன் ராஜசேகரன், தோ்தல்
வட்டாட்சியா் செல்வகணேஷ், வட்டாட்சியா் (மேற்கு) பிரகாஷ், பிஷப் ஹீபா் கல்லூரி முதல்வா் ஜே. பிரின்சி மொ்லின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.