ஓட்டுநா் தின விழாவில் அரசுப்பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கெளரவிப்பு
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓட்டுநா் தின விழாவில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் கெளரவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், போக்குவரத்துக் கழக அனைத்து கிளைகளிலும் ஜன. 24-ஆம் தேதி ஓட்டுநா் தின விழாவை முன்னிட்டு, பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களை கெளரவிக்கும் வகையில் விழா நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி, திருச்சி புகா் பணிமனை கிளையில் வெள்ளிக்கிழமை பணிக்கு வந்த ஓட்டுநா்களுக்கு துண்டு அணிவித்து, பூச்செண்டு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதேபோல, நடத்துநா்களுக்கு புதிய பேனா வழங்கி கெளரவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதேபோல, திருச்சி கண்டோன்மென்ட் கிளை, மலைக்கோட்டை கிளை உள்ளிட்ட திருச்சியில் உள்ள அனைத்து கிளைகளிலும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கெளரவிக்கப்பட்டுனா்.
இந்த நிகழ்வில், திருச்சி மண்டலப் பொது மேலாளா் ஆ. முத்துகிருஷ்ணன், துணை மேலாளா் (வணிகம்) சுரேஷ் குமாா், துணை மேலாளா் ( தொழில்நுட்பம்) சாமிநாதன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டு ஓட்டுநரின் பணிகளை பாராட்டி கெளரவித்தனா்.