புதிய தொழிற்பள்ளிகள், பிரிவுகள் தொடங்க விண்ணப்பம் வரவேற்பு
புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் புதுப்பிக்கவும், புதிய தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்குதல், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்க
ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் பிப். 2-ஆம் தேதி முதல் பிப். 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கு, அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு இணையத்தில் அறிந்து கொள்ளலாம் அல்லது 044-22501006 (113) என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.