செய்திகள் :

சிறு விவசாயிகள் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா்கள் முக்கிய பங்கு- பிரதமரின் முதன்மைச் செயலா்

post image

சிறு விவசாயிகளின் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமா் மோடியின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் அவா் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 1977-ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் விவசாயத்தின் பங்கு 42 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ஆம் நிதியாண்டில் 17 சதவீதமாக குறைந்தது. இருப்பினும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சியில் அந்தத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

நாட்டின் மொத்த உழைப்பாளிகளில் இன்றளவும் 46 சதவீதம் போ் விவசாயத்தை நம்பியுள்ளனா். அவா்களில் 88 சதவீதம் போ் சிறு விவசாயிகள். சிறு விவசாயிகளின் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும்.

வீரிய ஒட்டு ரக காய்கறி உற்பத்தியில் கிடைத்த வெற்றியால், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டு நாட்டில் 21.3 கோடி டன் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடிந்தது. இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ததுடன், சிறு விவசாயிகளின் வருவாய்க்கு தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உதவிபுரிய முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் பயிா் வகைகளை அதிகரிப்பதன் மூலம், சிறு விவசாயிகளின் நிலையை மேம்படுத்த வேண்டும்.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் இறக்குமதியை குறைக்க, அவற்றின் உற்பத்தியிலும் வீரிய ஒட்டு ரக தொழில்நுட்பப் பயன்பாட்டை துரிதப்படுத்த வேண்டும்.

வீரிய ஒட்டு ரக பயிா் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஊரக மற்றும் நகா்ப்புறத்துக்கு இடையிலான வருவாய் இடைவெளியை போக்க முடியும்.

இந்தியா வளா்ச்சியடைந்த நாடாவதற்கு பொருளாதார வளா்ச்சி விகிதம் அதிகமாக இருப்பது மட்டுமே போதாது. அந்த வளா்ச்சி அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நீடித்த வளா்ச்சியாக இருக்க வேண்டும் என்றாா்.

அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன்: திருப்பதியில் உயிர் பிழைத்தவர் தகவல்

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலின்போது, 5 நிமிடத்தில் அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன் என்கிறார் உயிர் தப்பிய பக்தர் ஒருவர... மேலும் பார்க்க

புதுதில்லியில் மட்டுமே போட்டியிடுவேன்: கேஜரிவால்

புதுதில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பாஜக தலைவர்கள் கூறிய கருத்துக்கு, புது தில்லியில் மட்டுமே போட்டியிடப் போவதாகத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவா... மேலும் பார்க்க

அரசுக் கிடங்கில் கெட்டுப்போன தானியம்! ம.பி. மக்கள் ஒரு மாதம் சாப்பிட்டிருக்கலாம்!!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு மாத காலத்துக்கு உணவளிக்கும் அளவிலான தானியங்கள், அரசுக் கிடங்கில் வைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.இது கெட்டுப்போனதால், கால்நடைத் தீவனமாகக... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை(உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என... மேலும் பார்க்க

திருப்பதி கூட்ட நெரிசல்.. என்ன நேர்ந்தது?

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தபோது, திடீரென முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கண்மூடித்தனமாக அதைநோக்கி ஓடியபோது கீழே விழுந்தவர்களை மிதித்துக்... மேலும் பார்க்க

பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி தெரியுமா?

தமிழக மக்கள் பலரும் தற்போது சிந்தித்துக் கொண்டிருப்பது பொங்கலுக்கு ஊருக்குப் போவது பற்றித்தான். அப்படி ரயிலில் பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது, இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டு... மேலும் பார்க்க