காதல் நடிகர் சுகுமார் மீது மோசடி புகார்!
துணை நடிகர் சுகுமார் மீது சென்னை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார்.
சென்னை சேர்ந்த நடிகை ஒருவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, குழந்தை இருக்கும் நிலையில், தன்னை சுகுமார் காதலித்து ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் நடிகை கூறியதாவது, அவருக்கும் காதல் படத்தில் நடித்த துணை நடிகர் சுகுமாருக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, இருவரும் காதல் செய்துவர, நடிகையிடம் இருந்து நகையும் பணமும் சுகுமார் வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், சமீப காலமாக நடிகையுடனான தொடர்பை சுகுமார் தவிர்த்து வந்ததுடன், நடிகையின் செல்போன் எண்ணையும் முடக்கியுள்ளார். இதுகுறித்து, சுகுமாரிடம் நடிகை கேட்டபோது, தனக்கு திருமணமாகி விட்டதாக சுகுமார் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சுகுமாருக்கு திருமணம் ஆனதை மறைத்து தன்னிடம் பொய்யாகப் பழகியதுடன், பணமோசடி செய்ததாகக் கூறி, சுகுமார் மீது காவல் நிலையத்தில் நடிகை புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நடிகர் சுகுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், காதல் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் எனும் 2 படங்களையும் இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க:இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? கேம் சேஞ்சர் திரை விமர்சனம்!