தனுஷ் வெளியிட்ட டிஎன்ஏ டீசர்!
நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.
கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் டிஎன்ஏ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் ஹரிஹரன் உள்பட பலர் இசையமைத்துள்ளார்கள். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் அதர்வாவுக்கு இந்தப் படம் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்று காத்திருக்கிறார்.