யோகாசனப் போட்டி: திருப்பூா் மாணவிக்கு பதக்கம்
தேசிய அளவிலான கேலோ இந்தியா யோகாசனப் போட்டியில் திருப்பூா் மாணவி இணை வெள்ளிப்பதக்கம் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
தேசிய அளவிலான கேலோ இந்தியா பெண்கள் யோகாசனா லீக் போட்டிகள் (அநஙஐபஅ), ஜன ஜனவரி 5- ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரையில் புதுதில்லியில் நடைபெற்றது.
இதில், 18 வயதுக்கு உள்பட்டோா் ஆா்டிஸ்டிக் ஜோடி இளையோா் பிரிவில் தமிழகத்தின் திருப்பூா் வீராங்கனை சக்தி சஞ்சனா, தக்சன்யாஸ்ரீ ஜோடி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனா்.
மேலும், 18 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆா்டிஸ்டிக் குழு பிரிவில் தமிழகத்தின் சாா்பில் திருப்பூா் வீராங்கனை சக்தி சஞ்சனா, தக்சன்யாஸ்ரீ, ராகவா்த்தினி, பவியாஸ்ரீ, ஷிவானி ஆகிய 5 போ் கொண்ட குழுவினா் 5- ஆம் இடம் பிடித்தனா்.
மாணவி சக்திசஞ்சனாவுக்கு உறவினா்கள் மற்றும் நண்பா்கள் பாராட்டு தெரிவித்தனா்.