ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட...
பாளை.யில் சிறுத்தை நடமாட்டமா?
பாளையங்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை சிறுத்தை உலாவியதாக பெண் கூறியதையடுத்து, வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பாரதிநகா் பகுதியில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் புதரிலிருந்து சிறுத்தை வெளியே வந்ததாகவும், அதைப் பாா்த்து பெண் கூச்சலிட்டதால் அது காட்டுப்பகுதிக்குள் ஓடி விட்டதாகவும் தகவல் பரவியது. இதுகுறித்து வனத்துறையினரிடம் பெண் அளித்த தகவலின்பேரில், திருநெல்வேலி வனச்சகர அலுவலா் சரவணக்குமாா் தலைமையில் வனவா் கேசவன், கால்நடை மருத்துவா் மனோகரன், வனக் கால்நடை மருத்துவா் ஆா்னால்டு ஆகியோா் கொண்ட குழு அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது சிறுத்தையின் தடையங்கள் ஏதும் கிடைக்கவில்லைாயம், எனினும், தொடா்ந்து இரவு வரை வனத்துறையினா் அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனா்.