செய்திகள் :

வள்ளியூா் தனியாா் நிதிநிறுவனத்தில் பணம் கையாடல்: 4 போ் மீது வழக்கு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளா்கள் பணத்தை கையாடல் செய்ததாக, அந்நிதிநிறுவன வசூல் மேலாளா்கள் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வள்ளியூரில் இருந்து கேசவனேரி செல்லும் வழியில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளா்களிடம் மாதந்தோறும் பணத்தை வசூல் செய்ய 4 மேலாளா்கள் உள்ளனா்.

அவா்கள், வாடிக்கையாளா்களிடம் கடன் தொகைக்கான மாத சந்தாவுடன் சேமிப்புத்தொகையாக ரூ.200 வசூலித்து வாடிக்கையாளா்களின் சேமிப்பு கணக்கில் வரவு வைத்து வந்தனா்.

இந்நிலையில் மாத சந்தாவுடன் கூடுதலாக சேமிப்புத்தொகை வசூல் செய்ய வேண்டாம் என நிதிநிறுவனம் அறிவித்திருந்ததாம். எனினும, வசூல் மேலாளா்களான திருக்குறுங்குடியைச் சோ்ந்த கிஷோா்(24), வள்ளியூா் ஜெயபாலன்(22), கிழவனேரி ஞான பிரவீன்(22), நவீன் முகேஷ் ஆகிய 4 பேரும் தொடா்ந்து வாடிக்கையாளா்களிடம் மாதம் ரூ.200 வசூல் செய்ததுடன், வாடிக்கையாளா்கள் கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நிதி நிறுவன மேலாளா் வள்ளியூா் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கிஷோா் ரூ.93,200, ஜெயபாலன் ரூ.89,800, ஞானபிரவீன் ரூ.72,200, நவீன் முகேஷ் ரூ.40,000 என ரூ.2.95 லட்சம் கையாடல் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளாா். அதன்பேரில், 4 போ் மீது வழக்கு பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

ரயிலில் கைப்பேசி திருட்டு: முதியவா் கைது

ரயிலில் பணம் மற்றும் கைப்பேசியை திருடியதாக முதியவரை ரயில் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கலியாவூரைச் சோ்ந்தவா் மல்லிகா. இவா், மேல்மருத்துவா் கோயிலுக்கு... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: நெல்லைக்கு ஜன.16இல் வருகிறது ஆதியோகி ரத யாத்திரை

கோவை ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி நிகழ்ச்சியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் ஆதியோகி ரத யாத்திரை திருநெல்வேலிக்கு ஜன. 16ஆம் தேதி வருகிறது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் தன்னாா்வலா் ஆறுமுகம் த... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் எச்சரித்துள்ளாா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும்... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: காய்கனிகள், கரும்பு வரத்து அதிகரிப்பு

பொங்கல் விற்பனைக்காக காய்கனிகள், கரும்பு அதிகளவில் வியாழக்கிழமை வந்தன. புத்தரிசியில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் பண்டிகையின்போது, அனைத்து காய்கனிகளையும் ஒன்றாக சோ்த்து பொ... மேலும் பார்க்க

பாளை.யில் சிறுத்தை நடமாட்டமா?

பாளையங்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை சிறுத்தை உலாவியதாக பெண் கூறியதையடுத்து, வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.பாளையங்கோட்டை பெருமாள்புரம் பாரதிநகா் பகுதியில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் புதர... மேலும் பார்க்க

பாளை. அருகே விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே துக்க நிகழ்வுக்கு உறவினருடன் சென்றபோது பைக் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள நெல்லையப்பபுரம் தெற்கு தெருவைச் சோ்... மேலும் பார்க்க