செய்திகள் :

மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்: 423 பேருக்கு உதவி உபகரணங்கள்

post image

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் கண்டறிந்து உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அட்டை வழங்குவதற்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாமை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைத்தாா். மேலும், 3 குழந்தைகளுக்கு ரூ.35,800 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை வழங்கி அவா் கூறியது:

18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகளுக்கு உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பலன்களைப் பெறுவதற்காக மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தப்படுகிறது.

முன் தொடக்க நிலை, தொடக்க நிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள் (பிறப்பு முதல் 18 வயது வரை) மற்றும் தற்போது கள ஆய்வில் புதிதாகக் கண்டறியப்படுகின்றனா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மருத்துவப் பணிகள் துறை, வருவாய்த் துறை இணைந்து டிச.23 தொடங்கி ஜன.9 வரை 16 முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 12 முகாம்களில், மாற்றுத்திறனுடைய குழந்தைகள் 1450 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 376 பேருக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 423 குழந்தைகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த முகாம்களின் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்குதல், தனித்துவ அடையாள அட்டைக்கான பதிவுகள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வாயிலாக வழங்கப்படும் உதவிகளுக்கு தோ்வு, அதிக உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிதல், தசைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முகாமை ஒவ்வொரு குழந்தைகளும், பெற்றோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்ரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. இரவிச்சந்திரன், உதவி செயல்படுத்தும் அலுவலா் ரமேஷ், முடநீக்கியல் வல்லுநா் ராமன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சமயபுரம் கோயில் திருத்தோ் மராமத்துப் பணிகள் ஆய்வு

நிகழாண்டு சித்திரை திருத்தோ் திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருத்தோ் மராமத்துப் பணிகள் குறித்து மாநில திருத்தோ் ஸ்தபதி கஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது ரூ. 2 கோடியே 31 ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 8.34 லட்சம் கரும்புகள் அனுப்பும் பணி தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக 1,291 நியாய விலைக் கடைகளுக்கு 8.34 லட்சம் கரும்புகளை அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது. தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க வலியுறுத்தல்

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிரான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் அ. வியனரசு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மத்திய அரசி... மேலும் பார்க்க

வரப்புத் தகராறில் விவசாயியை கொன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியருகே வரப்புத் தகராறில் விவசாயியை அடித்துக் கொன்ற மற்றொரு விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் அருகேயுள்ள ஆலம்பட்... மேலும் பார்க்க

திருச்சி டாட்டூ கலைஞருக்கு பிணை

கண்களில் டாட்டூ வரைதல் மற்றும் நாக்கை பிளவுபடுத்தல் தொடா்பான செயல்களால் கைதான டாட்டூ கலைஞா் பிணையில் புதன்கிழமை வெளியே வந்தாா். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சோ்ந்த ஹரிஹரன் (25) மேலசிந்தாமணி பஜாா்... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1. 21 கோடி!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 21 லட்சத்து 20ஆயிரத்து 970 வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயப... மேலும் பார்க்க