GOAT: "ஒரு வாரம் மன அழுத்தத்தில் இருந்தேன்..." - தி கோட் படத்தில் நடித்தது குறித்து மீனாட்சி சௌத்ரி
தி கோட், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. கோட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அளித்த பேட்டியில், 'தி கோட்' படம் தனக்குத் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் எனவும், தனக்கு ஒரு திருப்புமுனை கதாபாத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தி கோட் படத்தைத் தொடர்ந்து அவருக்கு வெளியான படம் 'லக்கி பாஸ்கர்'. தி கோட் படத்தை விட இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடம்பிடித்தார் மீனாட்சி.
இந்த நிலையில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஒன்றில், "நடிகர் விஜய்யின் 'தி கோட்' படத்தில் நடித்த பிறகு, நான் பலரால் ட்ரோல் செய்யப்பட்டேன். அதனால் ஒரு வாரம் மன அழுத்தத்திற்கு ஆளானேன். ஆனால் லக்கி பாஸ்கர், எனக்கு நிறைய பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. அப்போதுதான் நான் நல்ல கதைகளை, நமக்கு அங்கிகாரம் கிடைக்கும் கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்" என்றார்.
விகடன் ஆடியோ புத்தகம்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...