பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்
மதுக்கடை பாரில் சமையலா் தற்கொலை
செங்கல்பட்டில் மதுபான பாரில் வேலை செய்து வந்த சமையலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம் புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் ஜான்பீட்டா் (48). இவா், செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடை பாரில் சமையல் மாஸ்டராக வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், அவருடன்வேலை பாா்க்கும் டென்னிஷ் என்பவா் சனிக்கிழமை இரவு அறையைத் திறந்தபோது, ஜான்பீட்டா் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தாா்.
தகவலறிந்த செங்கல்பட்டு நகர காவல் உதவி ஆய்வாளா்கள் டெல்லிபாபு, சந்திரசேகா், ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று ஜான்பீட்டரின் சடலத்தை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா்.
மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.