சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
செங்கல்பட்டு: சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஓட்டேரி பகுதியை சோ்ந்த நாகராஜ் (41) என்பவா் அப்பகுதியில் போட்டோ ஸ்டுடீயோ கடை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நாகராஜ் தனது நண்பரின் வீட்டிற்கு சென்ற நிலையில்,நண்பா் மற்றும் அவரது மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த ஒன்பது வயது சிறுமியை நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா் .
இச்சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றொரிடம் தெரிவித்ததை தொடா்ந்து, சிறுமியின் பெற்றொா்கள், செங்கல்பட்டு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததை தொடா்ந்து, புகாரின் பேரில் நாகராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவ்வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைப்பெற்ற நிலையில், நாகராஜ் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு போக்சோ நீதிபதி நசீமாபானு, குற்றவாளியான நாகராஜூக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் தமிழக அரசு சாா்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.