தரம் மற்றும் நம்பிக்கையே எங்கள் தாரக மந்திரம் - தாமு செட்டியார் தங்க நகை மாளிகை
நம்முடைய வாழ்வின் அசைக்க முடியாத ஓர் அங்கமாக மாறியுள்ளது தங்கம். தமிழ் சமூகத்தில் தங்கமானது அலங்கரிக்கும் ஆபரணம் என்பதை விட தங்கம் இல்லாமல் எந்தவொரு விசேஷமும் முழுமையடைவதில்லை. சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலுமே அதன் விலை நாளுக்கு நாள் வானுயரத்தை நோக்கி எகிறிக்கொண்டே போனாலும் மக்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆசை மட்டும் குறைவதே இல்லை.
பரம்பரை பரம்பரையாக மொத்த விலை மளிகை பொருட்கள் வியாபாரம் செய்து வந்த குடும்பத்தை சேர்ந்த தாமோதரன் செட்டியாரின் மகன் ஜி. டி. சேகர் அவர்கள் 1992ம் ஆண்டு 120 சதுர அடி இடத்தில், நான்கு பணியாளர்களுடன் கோபிசெட்டிபாளையத்தில் பரபரப்பான தெருக்களில் நகைக்கடை ஒன்றை தொடங்கி வைத்து நகை வணிகத்துக்கு அடித்தளம் அமைத்தார்.
ஒரு எளிய முயற்சியாக தொடங்கிய அந்த ஸ்தாபனம் இன்று அதன் தரம், நம்பிக்கை மற்றும் நகைத் துறையில் காலத்தால் அழியாத கைவினைத்திறனுக்காகவும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் கொண்டாடப்படும் ஒரு பிராண்டாக கடந்த மூன்று சகாப்தங்களுக்கும் மேலாக தனி கவனம் பெற்று பிரகாசித்து வருகிறது தாமு செட்டியார் நகை மளிகை. இந்த பாரம்பரியமான நகை கடையின் நிறுவனர் ஜி. டி. சேகர் தங்களுடைய ஸ்தாபனம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருந்தார்.
”அன்பின் அடையாளமாக விளங்கும் தங்கத்தின் தரத்தில் எந்த ஒரு சமரசமும் இன்றி சிறந்த தங்க ஆபரணங்களை வழங்கி மக்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று தலைமுறைகளுடன் நல்ல ஒரு பிணைப்பை உருவாக்கி இன்று கோபிசெட்டிபாளையத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது தாமு செட்டியார் நகை மாளிகை.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் கொண்ட நகைகளை வழங்குவதுடன் மிக உயர்ந்த தரத்துடன் இருப்பதை முதலில் உறுதி செய்து கொள்வோம். இந்த தூய்மை மற்றும். நம்பக்கத்தன்மை தான் எங்களின் வாடிக்கையாளர்களுடன் இருக்கும் உறவை பலப்படுத்துகிறது.
அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரின் தங்கத்தின் தரத்திலும் வேறுபாடு இருக்கும். ஆனால் நகை வியாபாரம் தொடங்கிய நாள் முதலே தரத்தில் எந்த ஒரு குறைவும் இருக்க கூடாது என்ற தெளிவான நோக்கத்தை கொண்டு இருந்தோம். கோபிசெட்டிபாளையத்திம் தங்கத்தின் தரம் குறைவாக தான் இருக்கும் என்ற பொதுவான கருத்து இருந்த காலகட்டத்திலேயே தரமான தங்கத்தை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்யவில்லை. கோபிசெட்டிபாளையத்தின் தரம் சுத்தமாக இருக்கும் என்பதற்கு அஸ்திவாரம் போட்டது எங்களுடைய தாமு செட்டியார் நகை மாளிகை தான் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
அந்த காலத்திலேயே ஏராளமான கலெக்க்ஷன்களை ஷோரூமில் டிஸ்பிளே செய்து இருந்தோம். பெரிய சிட்டி, டவுன்களில் வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான ஒரு அனுபவம் கிடைக்குமோ அதே போல கோபிசெட்டிபாளையத்தின் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஏராளமான வெரைட்டியான கலெக்க்ஷன்களை டிஸ்பிளே செய்தோம். அதுவே எங்களின் நகை மாளிகையின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது.
கோபி செட்டிபாளையத்தில் கடையை விரிவுப்படுத்தியது மட்டுமின்றி அந்தியூர், சத்தியமங்கலம், அவினாசி, தாளவாடி என அனைத்து இடங்களிலும் கிளைகள் உருவாக்கப்பட்டு அனைத்து கிளைகளின் வாடிக்கையாளர்களுடனும் நல்ல ஒரு இணைப்பை ஏற்படுத்தி அவர்களின் தேவைகளையும் சரியான முறையில் கையாண்டு வருகிறோம். அவர்களை நாங்கள் எந்த அளவிற்கு மதிப்பிடுகிறோம் என்பதை இது பிரதிபலிக்கிறது. அதன் மூலம் எங்களின் உறவு வியாபாரத்தை கடந்தும் நினைவுகளாக மாறி பிணைப்பை ஏற்படுகிறது.
எங்கள் கடையில் இருக்கும் அதிகப்படியான கலெக்ஷன், மற்ற நகைகடைகளை காட்டிலும் குறைவான செய்கூலி மற்றும் சேதாரம் உள்ளிட்ட சிறப்பம்சங்களே அதிகப்படியான வாடிக்கையாளர்கள் எங்களின் கடையை தேர்ந்தெடுக்க முக்கியமான காரணம். எங்களிடம் ஆன்டிக் நகைகளுக்கே அதிகப்படியாக 15 முதல் 17% வரையிலான சேதாரம் தான். ஒவ்வொரு விழா மற்றும் பண்டிகை காலத்துக்கும் ஏற்ற வகையில் அவ்வப்போது லேட்டஸ்ட்டான புது புது டிசைன்களில் நகைகளை வடிவமைத்து வழங்கி வருகிறோம். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
மக்களுக்கும் தங்கத்திற்கும் இருக்கும் பந்தம் என்றுமே மாறப்போவதில்லை. அந்த வகையில் அவர்கள் விரும்பும் வண்ணம் புதுமையான ட்ரெண்டிங்கான நகைகளை சிறந்த தரத்துடன் என்றும் வழங்க அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க தயாராக இருக்கிறோம். இதுவே எங்கள் அன்பின் வெளிப்பாடு” என்றார் தாமு செட்டியார் நகை மாளிகையின் நிறுவனர் ஜி. டி. சேகர்.