ஐசிசியின் 2024 டி20 அணியில் ரோஹித் கேப்டன்..! 4 இந்தியர்கள் தேர்வு!
பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை: முதல்வர் தாக்கல் செய்த சட்டதிருத்த மசோதா!
சென்னை: தமிழகத்தில், பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சட்ட திருத்த மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் மரணமடையும் வரை சிறையிலேயே இருக்கும் வகையில் தண்டனையை அதிகரிக்கும், 2025 குற்றவியல் திருத்தச் சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை, பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது என்றார்.
மேலும், பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, தண்டனைகள் கடுமையாக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால், ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம் வகை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.