குவைத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
ஆத் ஆத்மி ஆட்சிக்கு வந்தால்.. கழிவுநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும்: கேஜரிவால்
ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தில்லியில் கழிவுநீர் தொடர்பான பிரச்னைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்ப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்தார்.
தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.5ல் நிகழவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட உள்ளனர்.
அரசியல் கட்சிகள் தில்லியில் ஆட்சி அமைத்தால் மக்களுக்கு என்னென்ன செய்யப்போகிறார்கள் என்று வரிசையாகத் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றனர். அந்தவகையில், தேர்தல் வாக்குறுதியாக அரவிந்த் கேஜரிவால் புதிய வாக்குறுதி ஒன்றை அறிவித்துள்ளார்.
தலைநகரில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கழிவுநீர் தொடர்பான பிரச்னைகள் களையப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விடியோ பதிவில்,
நகரில் அங்கீகரிக்கப்படாத இடங்களில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைத்தார். இந்தப் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
தில்லியில் ஆம் ஆத்மி அரசு அமைத்தபோது ஒருசில காலனிகளில எந்த வளர்ச்சிப் பணிகளும் இல்லாமல் இருந்தது. எந்த அரசும் இங்கு வாழும் மக்களைப் பற்றி கவலையோ, எந்த பணியும் செய்யவில்லை. மேம்பாட்டுப் பணிகளை ஆம் ஆத்மி அரசு தொடங்கியது.
நகரத்தில் உள்ள பல பகுதிகள் கழிவுநீர் குடிநீரை மாசுபடுத்தும் பிரச்னைகளில் மக்கள் சிக்கித் தவிக்கின்றது. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால், நகரம் முழுவதும் உள்ள கழிவுநீர் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று அவர் கூறினார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது, முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
2020 தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.